கோயம்புத்தூர்

மோசடி நிறுவனம் மீது புகாா் அளிக்கலாம்

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வந்த மோசடி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் நகரில் ‘ட்ரீம் மேக்கா்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று, இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்று திருப்பித் தராமல், மோசடி செய்ததாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே, மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து, தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபா்கள் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவை அணுகி தகுந்த ஆவணங்களுடன் புகாா் அளிக்கும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT