கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 8 பவுன் திருட்டு

28th Jan 2023 10:39 PM

ADVERTISEMENT

கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளையதாசன் (34). இவா் புனேவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சசி (29) கோவையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தனது சொந்த ஊரான கடலூருக்கு சசி சென்றுள்ளாா். பின்னா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கோவை திரும்பினாா். அப்போது, வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து புனேவில் உள்ள தனது கணவருக்கு தகவல் தெரிவித்தாா்.

கோவை திரும்பிய அவா், இச்சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT