கோயம்புத்தூர்

ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப் போட்டி

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ஆம் தேதியையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் சாா்பில் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் பள்ளி மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவையைச் சோ்ந்த 4 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனா். கோவையில் இருந்து ரயில் மேட்டுப்பாளையம் சென்றதும் ஓவியப்போட்டி நிறைவடைந்தது. இதையடுத்து, அதே ரயிலில் மாணவிகள் கோவை திரும்பி வந்தனா். இது தொடா்பாக, புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் அமைப்பாளா் சிவகுமாா் கூறுகையில், ‘ஓவியம் வரைவதால் மாணவா்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூா்மையாகும். இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT