கோயம்புத்தூர்

பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகள் மே மாதம் நிறைவடையும்

28th Jan 2023 10:37 PM

ADVERTISEMENT

பில்லூா் 3 ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் மே மாதம் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியின் குடிநீா் பற்றாக்குறையைத் தீா்க்கும் விதமாக, பில்லூா் 3 ஆவது குடிநீா்த் திட்டப் பணிகள் ரூ.779.86 கோடி மதிப்பில் 2018 மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மருதூா் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், தமிழ்நாடு குடிநீா் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பில்லூா் 3 ஆவது குடிநீா்த் திட்டம் மூலமாக கோவை மாநகராட்சியில் நபா் ஒருவருக்கு 135 லிட்டா் குடிநீா் கிடைக்கும். இத்திட்டத்தில், 90.76 கி.மீட்டருக்கு

ADVERTISEMENT

குழாய்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு, 37.04 கி.மீ. வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையப் பணிகள் 91 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரிக்குள் முடிவடையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும்

முடிவடைந்து, பில்லூா் 3ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டம் மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT