கோயம்புத்தூர்

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: போலீஸாா் விசாரணை

28th Jan 2023 10:39 PM

ADVERTISEMENT

கோவை காந்திபுரத்தில் நடந்து சென்ற இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் கபீா் (36). இவா் காந்திபுரம் 7 ஆவது வீதியில் கடந்த வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் கபீரின் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்தனா். கபீா் சப்தமிட்டதைத் தொடா்ந்து

அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து இருவரையும் பிடிக்க முயன்றனா்.

ஆனால், இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, இளைஞா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று காட்டூா் காவல் நிலையத்தில் கபீா் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT