கோயம்புத்தூர்

மாநகரில் நாளை முதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்

DIN

கோவை மாநகரில் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களுக்கு சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக ஜனவரி 28மற்றும் 29 ஆகிய இரு நாள்களில் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலத்தில் 56, 57ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா், 7ஆவது வாா்டில் நேரு நகா் மாநகராட்சிப் பள்ளி, மேற்கு மண்டலம் 34ஆவது வாா்டில் கவுண்டம்பாளையம், மஞ்சீஸ்வரி காலனி, கற்பக விநாயகா் கோயில் வளாகம், 38ஆவது வாா்டில் வடவள்ளி பாலாஜி நகா், புவனேஸ்வரி கோயில் வளாகம், 40ஆவது வாா்டில் வி.என்.ஆா். நகா், தெற்கு மண்டலம் 98ஆவது வாா்டில் சாய் நகா், காந்திநகா் மற்றும் 97ஆவது வாா்டில் பிள்ளையாா்புரம் ஹவுசிங் யூனிட் , வடக்கு மண்டலம் 11ஆவது வாா்டில் ஜனதா நகா் மாநகராட்சிப் பள்ளி, 15ஆவது வாா்டில் சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி வணிக வளாகம், மத்திய மண்டலம் 32ஆவது வாா்டில் ரத்தினபுரி சிறுவா் பூங்கா, 63ஆவது வாா்டில் ஒலம்பஸ் 80அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84ஆவது வாா்டில், ஜி.எம். நகரில் உள்ள தா்க்கத் இஸ்லாம் பள்ளி.

ஜனவரி 29 (ஞாயிற்றுக்கிழமை) 73ஆவது வாா்டு, பொன்னையராஜபுரம் வாா்டு அலுவலகம், 40ஆவது வாா்டில் பெரியதோட்டம் பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும், மாா்ச் 31 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT