கோயம்புத்தூர்

தைப்பூசம், பழனியில் கும்பாபிஷேகம்: கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்

DIN

தைப்பூசத்தை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகளின் தரப்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை - திண்டுக்கல் இடையே ஜனவரி 27, 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய 6 நாள்கள் பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தையொட்டி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, இந்த நாள்களில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.43 மணிக்கு பழனியை சென்றடையும். பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். இதேபோல, திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில், மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு பழனியை சென்றடையும். மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT