கோயம்புத்தூர்

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது: குடியரசு தின விழாவில்சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு

DIN

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது என்று ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பின்னா் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஆசிரமவாசிகளிடையே பேசியதாவது: பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாசாரம் என பல விதங்களில் வேறுபட்டு இருக்கிறோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் இருக்கும் இந்த பன்முகத்தன்மையையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன.

300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக அளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது.

அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாசாரம், ஆன்மிக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றாா்.

குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி, ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவா்கள் தேசபக்தி பாடல்களை பாடினா். ஈஷாவின் முக்கிய நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவா் சதானந்தம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் பழங்குடியினா் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT