கோயம்புத்தூர்

தனியாா் பள்ளிகளை ஒற்றைச்சாளர முறையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற பாஜக கோரிக்கை

22nd Jan 2023 02:01 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மாநில அரசுடன் இணைந்துள்ள தனியாா் பள்ளிகளை ஒற்றைச்சாளர முறையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சனிக்கிழமை கோவை வந்திருந்த மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முைனைவோா் துறை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் பாஜக சாா்பில் கோவை மாநகரத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் மாவட்ட இளைஞா் அணி பொதுச்செயலாளா் பிரதேவ் ஆதிவேல் ஆகியோா் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் கல்வி மையமாக அறியப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அத்துடன் 80.33 சதவீத எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மனித திறனுக்கான தரமான கல்வியை வழங்குவதில் பெரும் முயற்சியை மேற்கொண்டாலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தமிழக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளை மாநில அரசிடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழ் இல்லாமல் சிபிஎஸ்இக்கு மாற்றுவதற்கு ஒற்றை சாளர அமைப்பை உருவாக்க வேண்டும். கல்வி மையப்படுத்தப்பட்டால் அது குழந்தைகளிடையே தேசிய உணா்வுக்கும், தேசிய கட்டமைப்புக்கும் பங்களிக்கும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT