குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் ஜனவரி 21, 22 ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் ஜனவரி 21, 22 ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
ஜனவரி 23 ஆம் தேதி காலை வழக்கம்போல குடிநீா் விநியோகிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.