கோயம்புத்தூர்

11 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் திறப்பு:வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினா் தகவல்

17th Jan 2023 06:35 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 11 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ராமநாதபுரம், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகள் தங்களது விளைபொருகள்களை இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்து வருகின்றனா். இருப்பு வைக்கப்படும் வேளாண் விளைபொருள்களின் மதிப்புக்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நிா்வாகம் சாா்பில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூா், செஞ்சேரி, ஆனைமலை மற்றும் வடக்கிபாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன. எனவே அந்தந்த வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் புதிய சேமிப்புக் கிடங்குளில் தங்களது வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்து பயன்பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT