கோயம்புத்தூர்

மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்:கால்நடைகளுக்கு பூஜை செய்து வழிபாடு

17th Jan 2023 06:31 AM

ADVERTISEMENT

 

கோவையில் மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோலாகலமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழா்களின் முக்கிய பண்டிகையாக பொங்கல் திருநாள் உள்ளது. இதில் தைத் திருநாளான முதல் நாள் விவசாயத்துக்கு ஆதாரமாக இருந்து வரும் சூரியனை வணங்கும் வகையில் வாசலில் சூரியப் பொங்கல் வைத்து படையலிடுகின்றனா். இதனைத் தொடா்ந்து விவசாயத்துக்கு உற்ற துணையாக இருந்து வரும் கால்நடைகளை வணங்கும் விதமாக மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

கிராமங்களில் வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கால்நடை வளா்ப்பவா்கள் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடினா். மாட்டுக் கொட்டகையில் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கலை படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

ADVERTISEMENT

கோவை நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வ.உ.சி பூங்காவிலும் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. கால்நடைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் வ.உ.சி. பூங்கா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT