கோவை, பீளமேடுபுதுரில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த கட்சியின் தலைமை சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை, பீளமேடுபுதூரில் திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா். தொடா்ந்து கராத்தே அா்ஜூன் குழுவினரின் சிலம்பாட்டம், கலைமாமணி விருது பெற்ற மதுரை கோவிந்தராஜின் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
சமத்துவப் பொங்கல் விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினா் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மணிகண்டன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, கோவை மாநகா் மாவட்ட திமுக அவைத்தலைவா் கணபதி ப.ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.