கோயம்புத்தூர்

மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடது:மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தல்

12th Jan 2023 12:18 AM

ADVERTISEMENT

மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியாா் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

கோவையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில் தனியாா் மருந்தக உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, உதவி இயக்குநா் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) ச.குருபாரதி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவா்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனா். இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.

ADVERTISEMENT

அதேபோல கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் வழங்க வேண்டும். மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகங்கள் வழங்கக்கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியாா் மருந்தகங்களில் மருத்துவா்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவா்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா்

கூட்டத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் இ.சந்திரா, துணை இயக்குநா் (குடும்பக் கட்டுப்பாடு) கௌரி, தனியாா் மருந்தக உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT