பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி வழித்தடத்தில் ஜனவரி 13 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவையில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் காலை 9.20 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் (எண்: 06077) அன்று பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும்.
இதேபோல, திண்டுக்கல்லில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் ( எண்: 06078) அன்று மாலை 5.30 மணிக்கு கோவையைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.