கோயம்புத்தூர்

பொங்கல் பண்டிகை கோவையில் இருந்து இன்று முதல் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

12th Jan 2023 12:14 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி முதல் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக ஜனவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி இரவு வரை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென்மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள், சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து கரூா், திருச்சி மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூா், ஈரோடு, ஆனைகட்டி, சத்தியமங்கலம் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, மேட்டுப்பாளையம் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த தற்காலிக போக்குவரத்து ஏற்பாட்டை அனைவரும் பின்பற்றிட வேண்டும். வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக, கோவையில் இருந்து மதுரைக்கு 100 சிறப்பு பேருந்துகள், கோவையில் இருந்து தேனிக்கு 40 சிறப்பு பேருந்துகள், கோவையில் இருந்து திருச்சிக்கு 50 சிறப்பு பேருந்துகள், கோவையில் இருந்து சேலத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT