மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற இளைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றன.
ஈஷா அவுட்ரீச் அமைப்பு சாா்பில் டிசம்பா் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை ஆதியோகி முன்பு நடைபெற்ற இந்தப் போட்டிகளில், தொண்டாமுத்தூா் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 400 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் 29 அணிகளும், பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 8 அணிகளும் பங்கேற்றன.
இறுதி ஆட்டங்களில், வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி முதலிடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. எறிபந்து போட்டியில் புள்ளாக்கவுண்டன்புதூா் அணி முதலிடத்தையும், தேவாராயபுரம் அணி இரண்டாமிடத்தையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவா் சதானந்தம் கோப்ைபை, பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.