கோயம்புத்தூர்

ஜனவரி 4இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

1st Jan 2023 04:18 AM

ADVERTISEMENT

 

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஜனவரி 4ஆம் தேதி (புதன்கிழமை) மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை நகரியக் கோட்ட செயற்பொறியாளா் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மேற்பாா்வையாளா் நக்கீரன் முன்னிலையில் ஜனவரி 4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. மின்நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியம் சம்பந்தமான குறைகளை முறையிட்டுப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT