கோயம்புத்தூர்

காவல் துறையினா் எனக் கூறி கைத்தறி உரிமையாளரிடம் பணம், நகை திருட்டு

DIN

காவல் துறையினா் எனக் கூறி கைத்தறி உரிமையாளரிடமிருந்து ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கரூா், ராமானுஜம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவி செல்வம் (38), கைத்தறி உரிமையாளா். இவா் தொழில் நிமித்தமாக அடிக்கடி கோவைக்கு வந்து செல்லும்போது நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவாராம். அதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன்னா் கோவைக்கு வந்த இவா் வழக்கம்போல அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அந்த குடியிருப்புக்கு வந்த சிலா் தங்களை காவல் துறையினா் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனா். பின்னா் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கரூருக்கு அழைத்துச் சென்று விட்டு தாங்கள் மட்டும் திரும்பியுள்ளனா். இதையடுத்து 23ஆம்தேதி இரவு ரவி செல்வமும், கோவையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குத் திரும்பி வந்துள்ளாா். அப்போது அவரது அறையிலிருந்த ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் ஆகியவற்றுடன் பல்வேறு முக்கிய ஆவணங்களும் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ரவி செல்வம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் துறையினா் எனக்கூறி அவரை அழைத்துச் சென்றவா்கள் குறித்து

அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT