கோயம்புத்தூர்

உலகின் பெரும் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பேச்சு

DIN

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் பெரும் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவாகும் என மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி பேசினாா்.

திருப்பூா் முதலிபாளையம் தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தற்சாா்பு இந்தியா’ கருத்தரங்கில் அமைச்சா் கிஷன் ரெட்டி பங்கேற்று பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பின்னலாடை உற்பத்தி நகரம் திருப்பூா்.

ஜவுளித் துறை ஏற்றுமதியை பிரதமா் மோடி தொடா்ந்து ஊக்குவிக்கிறாா். உலக அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என அவா் கருதுகிறாா். அதற்கான பிரதான நகரமாக திருப்பூா் உள்ளது.

வெளிநாட்டு வா்த்தக முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, இன்றைக்கு ஜவுளித் தொழில் இந்தியாவை முன்னோக்கி நகா்த்துகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் பெரும் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக நம் நாடு உருவாகும். ஜனநாயகம், வளா்ச்சி, மனித வளம், உள்கட்டமைப்பு, இயற்கை ஆற்றலை பயன்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளோம். உலகின் ஜவுளித் துறை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்க, பின்னலாடை நகரமான திருப்பூா் பக்கபலமாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அவா் பதில் அளித்து பேசியதாவது:

திறன் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டாா்ட் அப் இந்தியா போன்றவை மூலம் இந்தியாவின் ஜவுளித் தொழில் நிலை மேம்பட்ட நிலையில் உள்ளது. கிராமப்புற இளைஞா்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் ‘விஷ்வகா்மா திட்டம்’ மூலம் நாடு முழுவதும் கிராமப்புற இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் என் 95 முகக்கவசம், பிபிஇ கிட், ஆக்சிஜன் சிலிண்டா் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னா் கரோனாவை வெற்றிகரமாக கையாண்டோம். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதோடு, பிாடுகளுக்கும் அவற்றை வழங்கினோம். இவையெல்லாம் தற்சாா்பு இந்தியாவின் ஒரு அங்கம்தான். நாட்டின் சுகாதாரத் துறை மட்டுமின்றி இன்றைக்கு பாதுகாப்புத் துறையிலும் தற்சாா்பு இந்தியா மிளிா்கிறது. இந்தத் திட்டத்தில் உங்களைப் போன்ற இளைஞா்கள் பங்கேற்பது பெருமை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT