தமிழ்நாடு

10ம் வகுப்புத் தேர்வு முடிவு: சேலம் மாவட்டத்தில் 91.13% தேர்ச்சி!

19th May 2023 11:01 AM

ADVERTISEMENT

 

பத்தாம் வகுப்பு தேர்வில் சேலம் மாவட்டத்தில் 91.13%  மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் நடப்பாண்டு 21,835 மாணவர்கள், 21,593 மாணவிகள் என 43,428 பேர்  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர் இதில் 19,168 மாணவர்கள், 20,410 மாணவிகள் என மொத்தம் 39,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.79 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.52 ஆகும். இதில் வழக்கம்போல மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தின் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.13% ஆகும்.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை 263 பள்ளிகளைச் சேர்ந்த 23,508 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 20,759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.31 ஆக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT