செய்திகள்

ரஜினியுடன் நடித்த கபில் தேவ்

19th May 2023 11:29 AM

ADVERTISEMENT


நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தில்  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், படத்தில் மொய்தீன் பாயாக நடிக்கும் ரஜினியுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT