திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக பூஜைகளின் போது ஒலிக்கும் கோயில் மணி அமைத்து வெள்ளிக்கிழமையுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது.
100 ஆண்டுகளுக்கு முன்பு 19.5.1923 அன்று கோயிலில் மூலவருக்கு நடைபெறும் அபிஷேக பூஜைகளின் போது, பயன்படுத்த ஏதுவாக செங்கல்வராய செட்டி என்பவா் சுமாா் 200 கிலோ எடைக் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட மணியைக் காணிக்கையாக வழங்கினாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையுடன் இந்தக் கோயில் மணிக்கு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயில் சாா்பில் அா்ச்சகா்கள் மாலை அணிவித்து தீபாராதனை, பூஜைகள் செய்து, கோயில் மணியின் 100 ஆண்டு சேவையை கொண்டாடினா்.