தமிழ்நாடு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: காஞ்சிபுரம் தேர்ச்சி விகிதம் 90.28% 

19th May 2023 11:09 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்து தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.

தேர்வெழுதிய 16,284 மாணவ, மாணவியரில் 14,702 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 7166 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 7535 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுவையில் 9.2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

இதேபோல, மாா்ச் 14 முதல் ஏப்.5 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா். தொடா்ந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டன.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தோ்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  8341 மாணவர்கள் 7943 மாணவிகள் என மொத்தம் 16284 மாணாக்கர்கள்  தேர்வினை எழுதியுள்ளனர் இதில் 7167 மாணவர்களும்   7535 மாணவிகளும் என  மொத்தம் 14702 தேர்ச்சி பெற்றுள்ளனர் 

மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 85.92%, மாணவிகள் தேர்ச்சி சதவீதம்  94.86%. ஆகமொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 90.28% ஆகும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT