கோயம்புத்தூர்

நாளை கோனியம்மன் கோயில் தேரோட்டம்

28th Feb 2023 01:38 AM

ADVERTISEMENT

கோவை, கோனியம்மன் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு மாசித் தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி பூச்சாட்டு நிகழ்வும், பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டும் நடைபெற்றது. தொடா்ந்து நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு மற்றும் வெள்ளை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பிப்ரவரி 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாசித் தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான தோ் வடம்பிடித்தல் நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறுகிறது. தோ் நிலையில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளை கடந்து மீண்டும் திருத்தோ் தோ்நிலையை அடைகிறது.

தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சியில் பேரூராதீனம், சிரவையாதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT