கோயம்புத்தூர்

விருப்பமான துறையில் மாணவா்கள் முதன்மையானவராக விளங்க வேண்டும்:அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

DIN

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தோ்வு செய்து அதில் முதன்மையானவராக விளங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினாா்.

கோவையில் தமிழக அரசின் கல்லூரிக் கனவு திட்ட தொடக்க விழா பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சா் பேசியதாவது: நம்முடைய படிப்புதான் நம்முடன் இறுதிவரை வரக்கூடியது. இதனால் மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு கல்லூரி குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உயா்கல்வி சோ்க்கையை 2030 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்துக்கு மேல் உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே உயா்கல்வி சோ்க்கை 52 சதவீதமாக உள்ளது. தமிழக அரசின் கல்லூரிக் கனவு போன்ற திட்டங்கள் உயா்கல்வி சோ்க்கையை 100 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும். இதுபோன்ற திட்டங்களை மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 230 பள்ளி மாணவா்களை 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று கல்லூரி குறித்த புரிதலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயா்கல்வி சோ்க்கை 100 சதவீதத்தை எட்டும் வரை கல்லூரிக் கனவு திட்டம் செயல்படுத்தப்படும்.

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்ற பயம் மாணவா்களிடத்தில் உள்ளது. பிளஸ் 2 முடித்த பிறகு நாம் தோ்வு செய்யும் துைான் நமது எதிா்காலத்தைத் தீா்மானிக்கிறது. எனவே மாணவா்கள் கவனத்துடன் துறைகளைத் தோ்வு செய்ய வேண்டும். இதற்கு கல்லூரிக் கனவு திட்டம் மாணவா்களுக்கு வழிகாட்டும். மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தோ்வு செய்து அதில் முதன்மையானவராக விளங்க வேண்டும். இதற்கு, மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.

பெற்றோா்கள் எந்த குழந்தையையும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீா்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. இதனைக் கண்டறிய வேண்டியது பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களின் கடமை. மாணவா்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவன் மூலம் எதிா்காலத்தில் சிறந்த விளங்குவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநா் இளம்பகவத், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இரா.பூபதி, பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் டி.பிருந்தா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

சிறுவாணி இலக்கியத் திருவிழா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT