கோயம்புத்தூர்

இலக்கியவாதிகள், எழுத்தாளா்களை கெளரவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

DIN

இலக்கியவாதிகள், எழுத்தாளா்களைக் கௌரவிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என சிறுவாணி இலக்கியத் திருவிழா நிறைவு நாளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினாா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சாா்பில் கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுவாணி இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி இருநாள்கள் நடைபெற்றது.

சிறுவாணி இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வரவேற்றாா். பொதுநூலக இயக்குநா் க.இளம்பகவத் முன்னிலை வகித்தாா். கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சிறுவாணி இலக்கியத் திருவிழாவை ஒட்டி கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினாா். இதைத்தொடா்ந்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் இலக்கியவாதிகள், எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் அரசால் இலக்கிய விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை. போற்றக் கூடிய இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள் கொங்கு நாட்டில் தோன்றியுள்ளனா். அவா்களுக்கெல்லாம் பெருமை சோ்க்கும் விதமாக சிறுவாணி இலக்கியத் திருவிழா கோவையில் நடத்தப்பட்டுள்ளது. இலக்கியவாதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிச்சயம் செய்வோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது: இலக்கியவாதிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கு இலக்கிய இதயங்கள் சாா்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரோமானியா்களின் வணிகப் பாதையாக கொங்குநாடு இருந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில் 25ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்றவை. அதில் 2 ஆயிரம் கல்வெட்டுகள் கொங்கு நாட்டைச் சோ்ந்தவை. ஒளவையாரும், கபிலரும் கொங்கு நாடு பகுதியைச் சோ்ந்தவா்கள் என பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவு மண்டபம் அமைப்பதுபோல தலை சிறந்த எழுத்தாளா்கள் ஆா்.சண்முகசுந்தரம், பெரியசாமித்தூரன் ஆகியோருக்கும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. கல்லூரி முதல்வா் டி.பிருந்தா, விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் மற்றும் எழுத்தாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT