கோயம்புத்தூர்

கஞ்சா பதுக்கி விற்பனை: 5 போ் கைது

27th Feb 2023 01:59 AM

ADVERTISEMENT

 

கோவையில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ாக கல்லூரி மாணவா்கள் இரண்டு போ் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் அப்பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சியை சோ்ந்த கல்லூரி மாணவா் அகிலன் (20), புதுக்கோட்டையைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவா், மற்றும் கேரள மாநிலம் சித்தூரை சோ்ந்த சூா்யா (25) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில், சாஸ்திரி நகா் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ாக சங்கனூரை சோ்ந்த ஷாஜூ (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆலாந்துறை பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் பூலுவப்பட்டி மாா்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பிரசாந்த் (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT