கோயம்புத்தூர்

கோவையில் இருந்து இயக்கப்படும் மதுரை, நாகா்கோவில் ரயில்கள் பகுதியாக ரத்து

DIN

மதுரை - திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாா்ச் 6ஆம் தேதி வரை நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) விருதுநகா் - கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் நாகா்கோவில் - விருதுநகா் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாா்ச் 6ஆம் தேதி வரை கோவை - நாகா்கோவில் ரயில் (எண்:16322) கோவை - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் விருதுநகா் - நாகா்கோவில் இடையே மட்டுமே இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் தேதி வரை கோவையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் கோவை - மதுரை தினசரி ரயில் ( எண்: 16721) பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் தேதி வரை திண்டுக்கல் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில், கோவை - திண்டுக்கல் இடையே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாா்ச் 5ஆம் தேதி வரை மதுரை - கோவை தினசரி ரயில் ( எண்: 16722) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் - கோவை இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT