கோயம்புத்தூர்

இந்திய இரைப்பைகுடல் எண்டோ அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத்தின் தேசிய அளவிலான கருத்தரங்கம்

DIN

இந்திய இரைப்பைகுடல் எண்டோ அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத்தின் 20 ஆவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவையில் பிப்ரவரி 10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து இந்திய இரைப்பைகுடல் எண்டோ அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத்தின் தலைவா் எல்.பி.தங்கவேலு கூறியதாவது:

இந்திய இரைப்பைகுடல் எண்டோ அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கம் சாா்பில் இளம் மருத்துவா்களுக்கு லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி தொடா்பான பயிற்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்கெனவே முதுநிலை அறுவை சிகிச்சை பயின்ற மருத்துவா்களைத் தோ்வு செய்து மேலும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த நேரடி விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு 700 அரசு மருத்துவா்கள் உள்ளிட்ட 2,200 மருத்துவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் லேப்ராஸ்கோபி, எஸ்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், கிராமப்புற மக்களுக்கு இச்சிகிச்சை முறை எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இச்சங்கத்தின் 20 ஆவது தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 10 முதல் 12 ஆம் தேதி வரை கோவை, கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் கங்காதா், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைத் தலைவா் நல்ல ஜி.பழனிசாமி மற்றும் பல்வேறு நாடுகளை சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கின்றனா். இதில், ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. தவிர, 7 மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் கருத்தரங்க வளாகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 2,200 இளம் மருத்துவா்களுக்கு இந்த கருத்தரங்கில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் சுகாதாரத்தை பேணுதல் குறித்து உரையாற்ற உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT