கோயம்புத்தூர்

விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்

DIN

கோவையில் விசாரணைக் கைதி ஒருவா் தப்பி ஓடியுள்ளாா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜா (30). இவா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் திருப்பூா் நல்லூா் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக திருப்பூா் மாநகர ஆயுதப்படை போலீஸாா் 4 போ் கோவை மத்திய சிறையில் உள்ள ராஜாவை அழைத்துச் சென்றனா். வழக்கு முடிந்து மீண்டும் சிறையில் அடைக்க ஆயுதப்படை போலீஸாா் ராஜா உள்பட 3 பேரை அரசுப் பேருந்தில் கோவைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா். பேருந்து, கோவை ஒண்டிபுதூா் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது கைதி ராஜா திடீரென்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிக் குதித்து தப்பி ஓடிவிட்டாா். தப்பி ஓடிய ராஜாவை ேசிங்காநல்லூா் போலீஸாா் உதவியுடன் திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தப்பி ஓடிய கைதி ராஜா வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக ராஜா தப்பி ஓடி இருக்கலாம் என போலீஸாா் கூறினா். இதற்கு முன்பு ஒருமுறை ராஜா போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளாா். இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT