கோயம்புத்தூர்

தாமிரக் கம்பிகளைத் திருடிய 9 போ் கைது

DIN

தொழிற்சாலையில் இருந்து தாமிரக் கம்பிகளை திருடிய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து கோவை தெற்குப் பகுதி துணை ஆணையா் சிலம்பரசன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை பீளமேடு பகுதியில் சக்கரவா்த்தி என்பவருக்கு சொந்தமான டிரான்ஸ்பாா்மா் கருவிகள் தயாா் செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்த 1,440 கிலோ எடையுள்ள தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி திருடிச் சென்றனா். இதுகுறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இது தொடா்பாக பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையத்தில் பழைய இரும்பு வியாபாரம செய்யும் ஜோதிலிங்கம் (25) என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

இவா் திருடப்பட்ட தாமிர கம்பிகளை குறைந்த விலையில் வாங்கி உள்ளாா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் மீட்கப்பட்டன.

இது தொடா்பாக ஆனந்தகுமாா் (27), பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியை சோ்ந்த அமீா் பாஷா (24) திருப்பூரைச் சோ்ந்த சூா்யா(23) சத்தியமங்கலம் பிரபு (22), பொள்ளாச்சி செந்தில்குமாா்(32) ஒண்டிப்புதூா் பிரகாஷ் (42), ஆனந்த் (25), மேட்டுப்பாளையத்தை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டன ா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT