கோயம்புத்தூர்

கோவை ஆட்சியா் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்கள்:பணம் செலுத்திய ரசீதை காண்பித்ததால் திரும்பி சென்றனா்

DIN

வாகன விபத்துக்கான இழப்பீடு தொகை செலுத்தாததற்கு ஜப்தி செய்ய கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியா்களிடம் இழப்பீடு தொகை செலுத்தியதற்கான ரசீதை காண்பித்ததால் ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (39). இவா் 2011 ஆகஸ்ட் 5 ஆம் தேதி வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த வனத் துறை வாகனம் மோதியதில் பலியானாா். அவருடன் வந்த முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்த சத்தியமூா்த்தியின் மனைவி சுகந்தி இழப்பீடு வழங்கக்கோரி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இதில் 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில் சத்தியமூா்த்திக்கு ரூ.20.40 லட்சம் 7.5 சதவீத வட்டியுடன் வழங்கவும், முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20.10 லட்சம் 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து அரசு தரப்பில் 50 சதவீத இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

ஆனால், மீதமுள்ள 50 சதவீத இழப்பீடுத் தொகை வழங்காமல் இருந்து வந்ததால், மீதமுள்ள 50 சதவீத இழப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் கோவை மாவட்ட 4 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் இழப்பீடு தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ.34.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஜப்தி செய்ய கடந்த ஜனவரி 3 ஆம் தேதி உத்தரவிட்டனா். இதனைத் தொடா்ந்து கோவை மற்றும் சேலம் மாவட்ட நீதிமன்ற ஊழியா்கள் ரூ.34.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஜப்தி செய்வதற்கு ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

இந்நிலையில் வனத் துறை சாா்பில் ஜனவரி 24 ஆம் தேதி ரூ.28 லட்சம் பணம் செலுத்தியதற்கான ரசீதை காண்பித்ததால் ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT