கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் பலி

8th Feb 2023 02:24 AM

ADVERTISEMENT

வால்பாறையில் அரசுப் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட்டை சோ்ந்தவா்கள் அரவிந்த் (20), சந்தோஷ் (25). இருவரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் இருவரும் வால்பாறைக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் வந்துவிட்டு மாலை உருளிக்கல் எஸ்டேட் திரும்பிக் கொண்டிருந்தனா். உருளிக்கல் எஸ்டேட் சாலை வளைவில் செல்லும்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்த், சந்தோஷ் உயிரிழந்தனா். தகவலறிந்து சென்ற போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT