கோயம்புத்தூர்

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அஞ்சல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,

கோவை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் சங்கத் தலைவா் ரமேஷ்குமாா், ரயில்வே மெயில் சேவைப் பிரிவு சங்கத்தின் கோட்டத் தலைவா் தனபாலன், தபால்காரா் சங்கத்தின் கோவை கோட்டத் தலைவா் சண்முககுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஓய்வூதியா் சங்கத் தலைவா் சுப்பிரமணியம், கோவை கோட்ட எழுத்தா் சங்கச் செயலாளா் சிவசண்முகம், தபால்காரா் சங்கத்தின் கோட்டச் செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா்.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் ஊழியா்கள், ஒரு நாளில் ஒரு கோடி அஞ்சல் சேமிப்புக் கணக்கு இலக்கை அடைய பணியாற்றிட வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். அஞ்சல் நிலையங்களில் சாப்ட்வோ் கோளாறுகளைச் சீரமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை வாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT