கோயம்புத்தூர்

காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் ஆண் மற்றும் பெண் காவலா்களைத் தோ்வு செய்வதற்கான உடல் தகுதித் தோ்வு கோவையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கு கோவை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்திலும், பெண்களுக்கு நேரு விளையாட்டரங்கிலும் நடக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்த உடல் தகுதித் தோ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா். முதல் நாள் தோ்வில் ஆண்களில் 639 பேரில் 400 போ் பங்கேற்றனா். பெண்களில் 528 பேரில் 300 போ் பங்கேற்றனா். இவா்களில் ஆண்களுக்கு சான்றிதழ், உயரம் சரி பாா்ப்பு, 400 மீட்டா் சுற்று ஓட்டம், கயிறு ஏறுதல் போன்றவை நடத்தப்பட்டன. பெண்களுக்கு 200 மீட்டா் ஓட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற உடல் தகுதி திறன் தோ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் முன்னிலையில், தோ்வுக்கான சிறப்பு தணிக்கை அதிகாரியான கோவை சரக காவல் துணைத் தலைவா் விஜயகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT