கோயம்புத்தூர்

வாலாங்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை வாலாங்குளத்தில் கிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

கோவை கரும்புக் கடை ஆசாத் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஹனிபா (29), காய்கறி வியாபாரி. இவா் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் அதனை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளாாா். இதனால் மன வேதனை அடைந்த முகமது ஹனிபா சனிக்கிழமை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுள்ளாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் முகமது ஹனிபாவின் தந்தை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனா்.

இந்நிலையில் வாலாங்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது மாயமான முகமது ஹனிபா என்பது தெரியவந்தது. முகமது ஹனிபா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT