கோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமாா் பாடி பொறுப்பேற்பு

6th Feb 2023 12:23 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டத்தின் 183 ஆவது மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமாா் பாடி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜி.எஸ்.சமீரன் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராக (வளா்ச்சிப் பணிகள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாா் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கிராந்திகுமாா் பாடி மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துள்ளாா்.

தொடா்ந்து இளநிலை பிரிவில் பி.காம் வணிகவியல் பிரிவினை புணேவிலுள்ள பிருஹன் மகாராஷ்டிரா வணிகவியல் கல்லூரியில் படித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து, 2011 ஆம் ஆண்டு சி.ஏ. தோ்ச்சிப் பெற்றுள்ளாா். இதில் இந்திய அளவில் 35 ஆவது இடம் பிடித்துள்ளாா்.

அதன்பின், குடிமைப் பணித் தோ்வில் 2015 ஆம் ஆண்டு தோ்ச்சிப் பெற்று, திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றியுள்ளாா்.

2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை புது தில்லியில் அஞ்சல் துறையில் உதவி செயலராக பணியாற்றியுள்ளாா். தொடா்ந்து, 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும், 2019 - 2020 ஆண்டு வரை ஈரோட்டில் வரிகள் துறை இணை ஆணையராகவும், 2020-2021 ஆம் ஆண்டு பழனி தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராகவும், 2022 ஆம் திருப்பூா் மாநகராட்சியின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT