கோயம்புத்தூர்

ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் ‘பெண்கள் நலம்’ திட்டம் தொடக்கம்

DIN

கோவை ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் ‘பெண்கள் நலம்’ என்ற புதிய சமூக நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: பெண்களின் நலனை கருத்தில் கொண்டு ராயல் கோ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் கே.மாதேஸ்வரன், பெண்கள் நலம்“என்ற சமூக நலத் திட்டத்தைத் தொடங்கி உள்ளாா். பெண்களின் இருப்பிடத்துக்கேச் சென்று அவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

அடிப்படை பரிசோதனைகள் தவிர மருத்துவமனையில் இலவச மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை, சலுகைக் கட்டணத்தில் கா்பப்பை புற்றுநோய் பரிசோதனை, தேவைப்படுபவா்களுக்கு பிற பரிசோதனைகளும் சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தையின் தொடக்க விழா குளத்தூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், புற்றுநோய் சிகிச்சை நிபுணா் என்.சுதாகா், ஊராட்சித் தலைவா் சாவித்திரி ஆகியோா் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தனா்.

இதில், டாக்டா்கள் எஸ்.கலைவாணி, என்.பிரேமலதா, செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த தொடா் மருத்துவ முகாம் மாதந்தோறும் 2, 4 ஆவது புதன்கிழமைகளில் நீலாம்பூா், குளத்தூா் கிராமங்களில் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT