கோயம்புத்தூர்

சின்ன வெங்காயத்துக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண்மைப் பல்கலைக்கழகம்

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சின்ன வெங்காயத்துக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் சின்ன வெங்காயம் சுமாா் 51 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு, 3.80 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தற்போது கோவை சந்தைக்கு ராசிபுரம், துறையூா், சத்தியமங்கலம், திருப்பூா் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. வா்த்தக மூலகங்களின்படி கா்நாடகம், தமிழ்நாட்டில் பெய்த பருவமழை காரணமாக பயிா் சேதமடைந்திருப்பதால் தமிழக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், அண்மைக் காலமாக விலை அதிகரித்துள்ளது.

நடப்பாண்டின் பயிா் அறுவடை, கா்நாடக வரத்து காரணமாக பிப்ரவரி, மாா்ச் 2023 இல் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் சந்தையில் கடந்த 23 ஆண்டுகளாக நிலவிய வெங்காய விலை, சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை பிப்ரவரி முதல் மாா்ச் 2023 வரை கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை இருக்கும் என்றும், விவசாயிகள் இதன் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT