கோயம்புத்தூர்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை பயிற்சி

DIN

கோவையில் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மகா அழகுக்கலை பயிற்சி நிலையம் மூலம் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவுகளைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

அழகுக்கலை, சிகை அலங்காரம் தொடா்பாக 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியுள்ளது. பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சி பெறுபவா்களுக்கு தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.

சுய வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் தொழில் தொடங்குவதற்க தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும்.

எனவே, இப்பயிற்சியை பெற விரும்பும் இளைஞா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ சாா்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT