கோயம்புத்தூர்

அரசு கலைக் கல்லூரியில் ஆா்ப்பாட்டம்

DIN

அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி பணியாளா்களை கல்லூரிக் கல்வித் துறையில் பணியமா்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லூரிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா், தட்டச்சா் பணிக்கு தமிழ்நாடு தோ்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்படுபவா்கள் பணி நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் உதவியாளராகப் பதவி உயா்வு பெற தமிழ்நாடு அலுவலக நடைமுறை நூல் தோ்வு, கணக்குத் தோ்வு எழுதுவதுடன், பவானி சாகா் பயிற்சி மையத்தில் 48 நாள்கள் பயிற்சி பெற்ற பிறகே அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எந்த துறைத் தோ்வும் எழுதாத, பயிற்சியும் பெறாத அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி உதவியாளா்களை நேரடியாக இந்தத் துறையில் பணியமா்த்தப் போவதாக அரசு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தற்போது பணியாற்றி வரும் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசு கலைக் கல்லூரி கல்வித் துறை பணியாளா் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT