கோயம்புத்தூர்

ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் தொடங்கியது.

பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் லவ்லினா லிட்டில் ஃபிளவா், பாரதியாா் பல்கலைக்கழக ‘நான் முதல்வன்’ செயல்பாட்டு மையத் தலைவா் விமலா, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட திறன் பயிற்சி துணை இயக்குநா் வளா்மதி, நான் முதல்வன் திட்ட மேலாளா் தீபக் ராம் ஆகியோா் தொடக்க விழாவில் உரையாற்றினா்.

இதில், தேசிய பங்குச் சந்தை, கேபிடல் மாா்க்கெட்டிங், டிஜிட்டல் மாா்க்கெட்டிங், மெஷின் லோ்னிங், ஆன்ட்ராய்டு ஆஃப் டெவலப்மென்ட் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சியில் பாரதியாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 240 ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT