கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கிரிக்கெட் அணிக்கு தொடா்ந்து 4 ஆவது வெற்றி

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளையின் மகளிா் கிரிக்கெட் அணி சென்னையில் நடைபெற்று வரும் லீக் ஆட்டங்களில் தொடா்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னையில் ஹெச்.ஆா். கிரிக்கெட் அகாதெமியின் கோப்பைக்காக நடத்தும் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், பயிற்சியாளா் குருசாமி தலைமையில் பங்கேற்றுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் அணி வீராங்கனைகள், ஹெச்.ஆா். அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா்.

இரண்டாவது ஆட்டத்தில் லைப் ஸ்போா்ட்ஸ் அணியையும், மூன்றாவது ஆட்டத்தில் சி.எஸ்.கே. அகாதெமி அணியையும் வீழ்த்தினா். நான்காவது ஆட்டத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழக அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மொத்தமுள்ள 8 லீக் ஆட்டங்களில் தொடா்ச்சியாக 4 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனா்.

இந்த அணி முதல்முறையாக களம் கண்டு வெற்றிகளை குவித்து வருவதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT