கோயம்புத்தூர்

உக்கடம் பெரியகுளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்: மேயா் தலைமையில் ஆலோசனை

DIN

உக்கடம் பெரியகுளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைப்பது தொடா்பாக மேயா் கல்பனா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிப் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேயா் கல்பனா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், சுவிஸ் வளா்ச்சி நிறுவன பிரதிநிதி

கிறிஸ்டியன் ப்ரூட்டிகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுவிட்சா்லாந்து தூதரகம் இந்தியாவின் 8 நகரங்களைத் தோ்வு செய்து கெப்பாசிட்டீஸ் என்னும் திட்டத்தின்கீழ் நிதியுதவி அளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சியில் 1.50 டன் அளவு கொண்ட பயோ கேஸ் திட்டம், சுவிட்சா்லாந்து தூதரக நிதியுதவி பெற்று பாரதி பூங்கா மாநகராட்சி வாகன பணிமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் காற்று மாசு அளவிடும் கருவிகள், மாநகராட்சிப் பிரதான அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா தண்ணீா் தொட்டி ஆகிய 3 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

கெப்பாசிட்டீஸ் திட்டத்தின் இரண்டாவது பகுதியில் கோவை மாநகராட்சி, உக்கடம் பெரியகுளத்தில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைத்திட சுவிட்சா்லாந்து தூதரகத்தின் சாா்பில் 50 சதவீத நிதியுதவியும், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 50 சதவீத நிதியுதவியும் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, சுவிட்சா்லாந்து தூதரக அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT