கோயம்புத்தூர்

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து ஜாா்கண்ட் மாநிலம், தன்பாத்துக்கு வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஜனவரி மாதம் இயக்கப்பட்டது. தற்போது, இந்த ரயிலானது மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 03357) செவ்வாய்க்கிழமைகளில் காலை 4 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

கோவை நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் மாா்ச் 29 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 12.50 மணிக்குப் புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 03358) வியாழக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு தன்பாத் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டணம், சாம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, பொகாரோ ஸ்டீல் சிட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT