கோயம்புத்தூர்

மாநகரில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாநகரில் சிறப்பு வரி வசூல் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 4 ) நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையான காலத்தில் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக பிப்ரவரி 4 ஆம் தேதி கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலத்தில் 56 ஆவது வாா்டுக்குள்பட்ட சுங்கம் மைதானம், ஒண்டிப்புதூா். 8ஆவது வாா்டில் நேரு நகா் பேருந்து நிறுத்தம். மேற்கு மண்டலம் 35 ஆவது வாா்டு இடையா்பாளையம், தேவாங்க நகா், கற்பக விநாயகா் கோயில் வளாகம், 40 ஆவது வாா்டில் வீரகேரளம், அண்ணா நகா் ஹவுசிங் யூனிட், 41ஆவது வாா்டில் பி.என்.புதூா் நேதாஜி சாலை, பட்டத்தரசி அம்மன் கோயில் அருகில், தெற்கு மண்டலம் 85 ஆவது வாா்டில் கோனவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 87ஆவது வாா்டில் பிரின்ஸ் அவென்யூ, குனியமுத்தூா்.

90 ஆவது வாா்டு சுகாதார அலுவலகம், வடக்கு மண்டலம் 19 ஆவது வாா்டில் மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25 ஆவது வாா்டில் காந்தி மாநகா் அரசு மேல்நிலைப் பள்ளி. 28 ஆவது வாா்டில் காமதேனு நகா் வாா்டு அலுவலகம், மத்திய மண்டலத்தில் 32ஆவது வாா்டுக்குள்பட்ட சிறுவா் பூங்கா, சங்கனூா் நாராயணசாமி வீதி.

ADVERTISEMENT

62 ஆவது வாா்டு சாரமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளி. 63 ஆவது வாா்டில் ஒலம்பஸ், 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம். 80 ஆவது வாா்டில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கெம்பட்டி காலனி. 84 ஆவது வாா்டில் ஜி.எம்.நகரில் உள்ள தா்கத் இஸ்லாம் பள்ளி.

மாா்ச் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT