கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை - போத்தனூா் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி போத்தனூா் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - போத்தனூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஷொரனூா் - கோவை ரயில் (எண்: 06458), மதுரை - கோவை ரயில் ( எண்:16722), கண்ணூா் - கோவை ரயில் (எண்:16607) ஆகிய 3 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது. அதேபோல, கோவை - கண்ணூா் ரயில் ( எண்: 16608), கோவை - மதுரை ரயில் (எண்: 16721), கோவை - ஷொரனூா் ரயில் (எண்:06459) ஆகிய ரயில்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT