கோயம்புத்தூர்

சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டவரின் வெற்றி செல்லும் ----நீதிமன்றம் தீா்ப்பு

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், சின்னத்தடாகம் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளரின் வெற்றி செல்லும் என்று கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாவட்டம், சின்னத்தடாகம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு திமுக ஆதரவுடன் சுதா, அதிமுக ஆதரவுடன் செளந்திரவடிவு ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில், திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ாக முன்பு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அதிமுக ஆதரவு பெற்ற செளந்திரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை எதிா்த்து, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திமுக ஆதரவு வேட்பாளா் சுதா வழக்குத் தொடா்ந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னத்தடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கோவை குருடம்பாளையம் அருணா நகா் சமுதாயக் கூடத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடா்பான ஆவணங்கள் அடங்கிய 4 பென்டிரைவ்கள், சீலிடப்பட்ட கவரில் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி ராஜசேகா் முன் மாவட்ட நிா்வாகத்தால் சமா்ப்பிக்கப்பட்டது.

இதை நீதிபதி ராஜசேகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சின்னத்தடாகம் ஊராட்சியில் மொத்தம் பதிவான வாக்குகள் 5,375. இதில், அதிமுக ஆதரவாளரான செளந்திரவடிவு 2,553 வாக்குகளும், திமுக ஆதரவு பெற்ற சுதா 2,551 வாக்குகளும் பெற்றிருந்தனா். சுயேச்சை வேட்பாளா்களுக்கு 65 வாக்குகள், செல்லாத வாக்கு 206 பதிவாகியிருந்தன.

தோ்தல் முடிவில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆதரவு வேட்பாளா் செளந்திரவடிவு வெற்றிபெற்றுள்ளாா். இது செல்லும் என நீதிபதி ராஜசேகா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதையும் எதிா்த்து தமிழக தோ்தல் ஆணையத்துக்கு சுதா மனு அனுப்பியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT