கோயம்புத்தூர்

குடியிருப்புகளைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வால்பாறை அருகே எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த 2 குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிகளுக்குள் நுழையும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் வடக்கு டிவிஷன் பகுதியில் புதன்கிழமை இரவு நுழைந்த யானைகள் அங்கிருந்த 2 குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT